
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில்அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக ரோஹித் சரமா நீடிக்கும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதசமயம் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா, அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இருந்து விலகினார். அதன்பின் சிகிச்சைப் பெற்றுவரும் ஜஸ்பிரித் பும்ரா தற்போது நடந்து வரும் இங்கிலாந்து தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஒருநாள் தொடரின் கடைசி போட்டிக்கான இந்திய அணியில் மட்டும் அவர் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.