பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இப்போட்டியில் மழைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்க்க, அடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 260 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. பின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 87 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்ததுடன், இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 8 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
Trending
இறுதியில் தொடர் மழை காரணமாக இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனால் இரு அணிகளும் இத்தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் நீடித்து வருகின்றனர். இதனையடுத்து ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் எதிர்வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள்
இந்நிலையில் இப்போட்டியில் பும்ரா தனித்துவ சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெறுவார். அதன்படி இதில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை எட்டுவார். பும்ரா இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 83 இன்னிங்ஸில் 194 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மெல்போர்னில் பும்ரா இந்த எண்ணிக்கையைத் தொட்டால், இந்தியாவுக்காக அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை சமன்செய்வர்.
இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 44 போட்டிகளில் 200 விக்கெட்டுகளி வீழ்த்தி இரண்டாம் இடத்தில் தொடர்கிறார். அதேசமயம் வேகப்பந்து வீச்சாளர் என்ற முறையில், இந்தியா சார்பில் அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெறுவார். தற்போது இந்த சாதனையை கபில்தேவ் தன்வசம் வைத்துள்ளார். அவர் தனது 50ஆவது டெஸ்டில் இந்த மைல் கல்லை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 150 விக்கெட்டுகள்
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர இப்போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் இரண்டாவது மற்றும் உலகளவில் ஐந்தாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். இதுவரை ரவிச்சந்திரன் அஸ்வின், நாதன் லயன், பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் மட்டுமே இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளனர். பும்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 33 டெஸ்ட் போட்டிகளில் 63 இன்னிங்ஸ்களில் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now