
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 112 ரன்களுகே 5 விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்திலேயே சொதப்பினாலும், அதன்பின் ஜோ ரூட்டின் அபாரமான சதத்தின் மூலமாக சரிவிலிருந்து மீண்டவது. இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களைச் சேர்த்தது.
இதில் ஆட்டமிழக்காமல் உள்ள ஜோ ரூட் 106 ரன்களுடனும், ஒல்லி ராபின்சன் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்தன் மூலம் ஜோ ரூ சில சாதனைகளை குவித்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் சதமடித்தன் மூலம் இந்திய அணிக்கெதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 சதங்களை அடித்த முதல் வீரர் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணிக்கு எதிராக 9 சதங்களை அடித்ததே சாதனையாக இருந்தது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் இந்திய அணிக்கெதிராக 8 சதங்களை அடித்துள்ளார்.