சங்கக்காராவின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்கக்காராவை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்தின் ஜோ ரூ 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணியானது இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்து தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது கேப்டன் ஒல்லி போப்பின் அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 325 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஒல்லி போப் 154 ரன்களைக் குவித்தார். இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிலன் ரத்நாயக்கே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Trending
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் தனஞ்செயா டி சில்வா, பதும் நிஷங்கா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் வெறும் 156 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதனால் இலங்கை அணிக்கு வெறும் 219 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இலக்கை நோக்கி விளையாடி வரும் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களைச் செர்த்து வெற்றியை நோக்கி நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்த நிலையிலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காராவின் வாழ்நாள் சாதனையை தகர்த்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுத்தந்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
அதன்படி, இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் 8 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 6ஆவது வீரர் எனும் சங்கக்காராவின் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன் குமார் சங்கக்காரா 12,400 ரன்களுடன் 6ஆவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது ஜோ ரூட், 12,402 ரன்களைக் குவித்து 6ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now