
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியான்னது நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் நாளைய போட்டியில் ஜோ ரூட் சில் சாதனைகளை முறியக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
கிறிஸ் கெயிலின் வாழ்நாள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு
இலங்கை அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ஜோ ரூட் 152 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி 13ஆவது இடத்தைப் பெறுவார். ஜோ ரூட் இதுவரை 346 போட்டிகளில் விளையாடி 451 இன்னிங்ஸ்களில் 19,442 ரன்கள் எடுத்துள்ளார். கிறிஸ் கெய்ல் 483 போட்டிகளில் 551 இன்னிங்ஸில் 19,593 ரன்களை எடுத்து தற்போது 13ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.