கிறிஸ் கெயில், சந்தர்பால் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் விளையாடும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான இராண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இலங்கை அணி வெற்றிபெற்றால் தொடரில் நீடிக்கும். இதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காயம் காரணமாக விலகிய மார்க் வுட்டிற்கு பதிலாக ஒல்லி ஸ்டோனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Trending
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். அதன்படி இந்தப் போட்டியில் ஜோ ரூட் 48 ரன்கள் எடுத்தால், சர்வதேச அளவில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி 13ஆவது இடத்தைப் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஜோ ரூட் 347 போட்டிகளில் 453 இன்னிங்ஸ்களில் விளையாடி 19,546 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் கிறிஸ் கெய்ல் 483 போட்டிகளில் 551 இன்னிங்ஸ்களில் விளையாடு 19,593 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர்த்து இந்தப் போட்டியில் ஜோ ரூட் அரைசதம் அடிக்கும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக 50பிளஸ் ஸ்கோரை அடித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பாலை பின்னுக்கு தள்ளி 5ஆம் இடத்தைப் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, சந்தர்பால் மற்றும் ஜோ ரூட் இருவரும் கூட்டாக தலா 96 அரைசதங்களை விளாசி ஐந்தாவது இடத்தை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
Win Big, Make Your Cricket Tales Now