
ENG vs IND, 1st Test: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜோ ரூட் (Image Source: Google)
Joe Root Record: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியி இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 28 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்திருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.
ஹெடிங்லே டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் இறுதியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 58 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இப்போட்டியில் ஜோ ரூட் பெரிய ரன்களைக் குவிக்கவில்லை என்றாலும் சச்சின் டெண்டுல்கர், சனத் ஜெயசூர்யா போன்ற ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிப்பு