ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டாம் - ஆர்ச்சருக்கு கட்டளை விதித்த இங்கிலாந்து!
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பணிச்சுமை மற்றும் உடற்தகுதி காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை பங்கேற்க வேண்டாம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் வரும் 19ஆம் தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணி வீரரும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டிலை வெளியிட்டது. அதன்படி 10 அணிகளில் 77 வீரர்களின் தேவை உள்ளது. இதனையடுத்து 1,166 வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்திற்கு தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் 2024 ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, உடற்தகுதியை மீட்டெடுக்கவும், தனது பணிச்சுமையைக் குறைக்கவும் ஐபிஎல் தொடரை புறக்கணிக்குமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஜோஃப்ரா ஆர்ச்சரை கேட்டுக் கொண்டுள்ளது.
Trending
கடந்த 2022 ஐபிஎல் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியால் 8 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் எதிர்பார்த்த அளவிற்கு விளையாட காரணத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிரேட் முறையில் மூலம் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
இந்தியாவின் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை விட ஜோஃப்ரா ஆர்ச்சரை இங்கிலாந்தில் இருந்தால் அவரின் திறமையை மேலும் மேம்படுத்த எளிதாக இருக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவிக்கிறது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஜோ ரூட் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்தான் அறிமுகம் ஆனார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், ஜோ ரூட்டை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல் சென்னை அணிக்கு 16.25 கோடிக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 2024 ஐபிஎல் போட்டியில் இருந்து, பணிச்சுமை மற்றும் உடற்தகுதி காரணமாக விலகியுள்ளாது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now