IND vs ENG: டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை நிகழ்த்த காத்திருக்கும் பட்லர்!
இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஜோஸ் பட்லர் மேற்கொண்டு 33 ரன்கள் எடுத்தால், டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டவுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 22 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் சில சிறப்பு சாதனைகளை படைக்க காத்திருக்கிறார். அதுகுறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
12000 டி20 ரன்கள்
இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஜோஸ் பட்லர் மேற்கொண்டு 33 ரன்கள் எடுத்தால், டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டுவார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்களை கடந்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் மற்றும் உலகின் ஏழாவது வீரர் எனும் பெருமையைப் பெறவுள்ளார். இதற்கு முன் இந்த சாதனையை கிறிஸ் கெய்ல், சோயிப் மாலிக், கீரோன் பொல்லார்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோர் மட்டுமே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
150 டி20 சர்வதேச சிக்ஸர்கள்
இதுதவிர்த்து இத்தொடரில் ஜோஸ் பட்லர் 4 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 சிக்ஸர்களை பதிவுசெய்வார். இத்னை பட்லர் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டியில் 150 சிக்ஸர்களை அடித்த முதல் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். தற்போது, ரோஹித் சர்மா (205), மார்ட்டின் குப்தில் (173) மற்றும் முகமது வாசிம் (158) ஆகியோர் மட்டுமே இந்த வடிவத்தில் 150 சிக்ஸர்களை எட்டியுள்ளனர். ஜோஸ் பட்லர் 118 டி20 போட்டிகளில் 146 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 350 சிக்ஸர்கள்
அதேசமயம் ஜோஸ் பட்லர் ஒரு சிக்ஸர் அடித்தால், சர்வதேச கிரிக்கெட்டில் 350 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த உலகின் எட்டாவது கிரிக்கெட் வீரராகவும், இங்கிலாந்தின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெறுவார். மூன்று வடிவங்களிலும் சேர்த்து இதுவரை 367 போட்டிகளில் 372 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பட்லர் 349 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
தற்போது இந்த பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா (624) முதலிடத்தில் உள்ளா. அவரைத் தொடர்ந்து, கிறிஸ் கெய்ல் (553), ஷாஹித் அப்ரிடி (476), பிரெண்டன் மெக்கல்லம் (398), மார்ட்டின் கப்தில் (383), எம்எஸ் தோனி (359) மற்றும் சனத் ஜெயசூர்யா (352) ஆகியோர் மட்டுமே ஜோஸ் பட்லருக்கு முன் இந்த பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து டி20 அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், ரெஹான் அகமது, ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஸ்மித், பிலிப் சால்ட், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க் வுட், சாகிப் மஹ்மூத்.
Win Big, Make Your Cricket Tales Now