
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி பல சர்ச்சைகளில் முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கில் ஸ்லிப்பில் தந்த கேட்சை கேமரூன் கிரீன் சர்ச்சையான முறையில் பிடித்தார்.
இதை பலமுறை டிவியில் பார்த்த மூன்றாவது நடுவர் இறுதியில் அவுட் என்று அறிவித்தார். இதுகுறித்து அப்போதே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நடுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில் பந்தை முதலில் பிடிக்கும் பொழுது முழுக்கட்டுப்பாட்டில் இருந்தால் போதும்; பிறகு விரல்களின் இடையில் பந்து தரையில் மோதுவது பிரச்சனை கிடையாது என்று விதி இருக்கிறது. அதனால் அவுட் என்று அறிவிக்கப்பட்டது என்று விளக்கம் கூறப்பட்டது.
நடுவரின் இந்தத் தீர்ப்பில் விரக்தி அடைந்த ஷுப்மன் கில் தீர்ப்பை விமர்சிக்கும் விதத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கேமரூன் கிரீன் தரையில் படுமாறு பந்தை பிடித்த புகைப்படத்தை பதிவேற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கு கைதட்டும் எமோஜியையும் பயன்படுத்தி இருந்தார்.