
ஆசிய கோப்பை தொடரையும் தவறவிடும் ராகுல், ஸ்ரேயாஸ்; அதிர்ச்சியில் ரசிகர்கள்! (Image Source: Google)
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இம்மாதம் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாள், ஆஃப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இந்த தொடர் நடைபெறுவதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலக கோப்பையில் யார் அணியில் இடம்பெறப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் தொடராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் தற்போது மூன்று இடம்தான் பேட்டிங்கில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஷுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தங்களுடைய இடத்தை பிடித்துக் கொண்டுள்ளனர். தற்போது இந்திய அணியில் பிரச்சனையே நடு வரிசையிலும் விக்கெட் கீப்பிங் யார் செய்வார்கள் என்பதும் தான்.