
KL Rahul 'Healing & Recovering Well' After A Successful Surgery (Image Source: Google)
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 தொடரில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டதால், கேஎல் ராகுல் இந்திய அணியை வழிநடத்துவதாக இருந்தது.
ஆனால் கேஎல் ராகுல் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியதால் ரிஷப் பந்த் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று ஒருநாள், டி20 தொடர்களில் ஆடுகிறது. கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சென்றபோது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. கரோனா காரணமாக ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. அந்த போட்டி எட்ஜ்பாஸ்டனில் ஜூலை ஒன்றாம் தேதிதொடங்கி நடக்கிறது.