
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. மேலும் மே 29ஆம் தேதி முதல் பிளே ஆஃப் போட்டிகளும், ஜூன் 03அம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுதவிர்த்து பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் மும்பை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஜெய்ப்பூர், அஹ்மதாபாத் நகரங்களில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதனைத்தொடர்ந்து மே 18ஆம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எஞ்சிவுள்ள போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே முன்னேற முடியும் என்பதால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.