
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் என்ற வரிசையில் இருந்த முக்கியமான வீரர் கே எல் ராகுல். ரோஹித் சர்மா காயம் காரணமாக இல்லாத போதெல்லாம் கே எல் ராகுல் தான் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு கேப்டனாக செயல்பட்டார். ஆனால் ஹர்திக் பாண்டியாவின் அசுர வளர்ச்சி காரணமாக ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் கே எல் ராகுல் கேப்டன் பதவியை இழந்தார். மேலும் டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் சிறப்பாக விளையாடாத காரணத்தால் நீக்கப்பட்டார்.
எனினும் நடப்பு ஐபிஎல் சீசனில் கம்பீரின் வழிகாட்டுதலின் கீழ் கேல் ராகுல் கேப்டன் பதவியில் பல முன்னேற்றத்தை கண்டார். ஆனால் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகும் நிலை அவருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தோனி, ரோஹித், கோலி ஆகியோரிடம் இருந்து பிடித்தது என்ன என்பது குறித்து கே எல் ராகுல் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா கேப்டனாகவும் தலைவராகவும் அறிவு கூர்மையாக இருப்பார். ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே பணியாற்றுவார். ஒவ்வொரு வீரரின் பலம் என்ன என்பது குறித்து ரோகித் சர்மாவுக்கு நன்றாகவே தெரியும். தன் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் ஆட்ட நுணுக்கத்தையும் ரோஹித் சர்மா அறிந்து கொள்வார்.