
இந்திய அணி அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில், தற்சமாயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ள இந்திய அணி வீரர்கள் தங்களது பயிற்சியாஇ தொடங்கியுள்ளனர். அதன்படி இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை பிசிசிஐ தங்களது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தியில் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து பிசிசிஐ பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.