லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவிலிருந்து விலகும் கேஎல் ராகுல்?
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து கேஎல் ராகுல் விலகவுள்ளதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 இக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆயூஸ் பதோனி 55 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 48 ரன்களும் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக்க் சர்மா ஆகியோர் போட்டியின் முதல் ஓவரில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 16 பந்துகளிலும், அபிஷேக் சர்மா 19 பந்துகளிலும் என தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். இருவரும் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்ததுடன், பரபட்சம் பார்க்காமல் பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசியதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டியது.
Trending
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையான விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இது போட்டியின் முடிவுக்கு பின்னர் நேரலையில் ஒளிபரப்பட்டிருந்தது. இதனால் கேஎல் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
KL Rahul might quit the LSG captaincy pic.twitter.com/7URvMRCaFG
— CRICKETNMORE (@cricketnmore) May 9, 2024
இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேஎல் ராகுல் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய போட்டிக்கு பிறகு கேஎல் ராகுலை கேப்டன் பதவியிலிருந்து நீக்கவும், மேலும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர் ஏலத்திற்கு முன்னதாக அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து விடுவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கேஎல் ராகுல் நேற்றைய போட்டிக்கு பிறகு அணியினருடன் பயணிக்காமல், மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அவர் ஒருசில தினங்களில் மீண்டும் அணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை கேஎல் ராகுல் கேப்டன் பதவியிலிருந்து விலகும் நிலையில் நிக்கோலஸ் பூரன் அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேஎல் ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளியான தகவலின் காரணமாக அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now