
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை குறித்த விவாதம் மீண்டும் எழத்தொடங்கியுள்ளது. இரு பேட்ஸ்மேன்களும் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு விமர்சனங்களை எதிர்கொண்டாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களின் பங்களிப்பை மதிப்பிடுவதற்கான வழி குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.ண்ட்
அந்தவகையில் ரோஹித் சர்மாவை விட விராட் கோலி ஒரு சிறந்த நவீன டெஸ்ட் வீரராக இருப்பதன் காரணமாக அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை டெஸ்ட் போட்டியில் ஒப்பிட முடியாது. ஏனெனில் விராட் கோலி அதில் முன்னணியில் உள்ளார். அவர் ஒரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். எனவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நிச்சயமாக நீண்ட காலம் விளையாட தகுதியானவர்.
அதனால் நாம் விராட் கோலி பற்றி அதிகம் யோசிக்க தேவை இல்லை. என்னைப் பொறுத்தவரை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் என்ன செய்கிறார் என்பதை அறிய விரும்புகிறேன். ஏனெனில் உங்கள் அணியின் சிறந்த பேட்டரின் பிரச்சனை என்ன என்பது குறித்து அவர்களால் ஏன் தீர்வு காணமுடியவில்லை என்பது தான் மிகப்பெரும் கேள்வியாக உள்ளது. விராட் கோலியைப் பற்றி ஏற்கனவே நிறைய சொல்லப்பட்டுவிட்டது. அவர் ஒரு கடினமான கட்டத்தை கடந்து செல்லும் ஒரு சிறந்த வீரர்.