WTC Points Table: ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய; முதல் புள்ளியைப் பெற்றது இந்தியா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 24 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

Latest WTC Points Table: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது ரசிகர்களின் ஆர்வத்தை கூட்டும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது. இதில் தற்சமயம் மூன்று பதிப்புகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இதனையடுத்து 2025-27ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகின்றன. இந்த தொடர்களில் தற்போது வரையிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ள ஆஸ்திரேலிய அணி 24 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஒரு வெற்றி, ஒரு டிரா செய்ததன் மூலம் 16 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.
Updated WTC Points Table After #AUSvsWI and #ENGvsIND Tests pic.twitter.com/MvG9JJIhBG
— CRICKETNMORE (@cricketnmore) July 7, 2025
Also Read: LIVE Cricket Score
அதேசமயம் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்து 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்று மற்றும் நான்காம் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இலங்கை டெஸ்ட் தொடரை இழந்துள்ள வங்கதேச அணி 4 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி புள்ளிகள் ஏதுமின்றி 6ஆம் இடத்தில் தொடர்கிறது.
Win Big, Make Your Cricket Tales Now