Advertisement

'நாட்டிற்காக வெற்றி பெறுவோம்' - ரிஷப் பந்த்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்த விலகிய நிலையில், அணி வீரர்களை உத்வேகப்படுத்தும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Advertisement
'நாட்டிற்காக வெற்றி பெறுவோம்' - ரிஷப் பந்த்
'நாட்டிற்காக வெற்றி பெறுவோம்' - ரிஷப் பந்த் (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 28, 2025 • 02:30 PM

Anderson–Tendulkar Trophy: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 28, 2025 • 02:30 PM

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நான்று போட்டிகளின் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியையும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும். இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தால் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அதன்படி இந்திய அணியின் துணைக்கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு மற்றாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசன் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கும் இந்த் தொடரை 2-2 என சமன் செய்ய வெற்றி பெற வேண்டும் என்று சக வீரர்களுக்கு ரிஷப் பந்த் ஆலோனை வழங்கியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “தனிப்பட்ட இலக்கைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக, எங்கள் அணியை வெற்றிபெறச் செய்ய அல்லது அணியை முன்னோக்கி நகர்த்த என்ன தேவைப்பட்டாலும் அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன். மேலும் அவர்கள் எனக்கு ஆதரவளித்த விதம் ஆச்சரியமாக இருந்தது. மேலும் எங்கள் அணி அழுத்தத்தில் இருந்தது.  ஆனால் முழு நாடும் ஒரே காரணத்திற்காக உங்கள் பின்னால் நிற்கும்போது, அதற்காக நீங்கள் உங்களின் முழு முயற்சியையும் வழங்க வேண்டும்.

Also Read: LIVE Cricket Score

என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்ற உணர்ச்சியை விளக்குவது மிகவும் கடினம். என் அணிக்கு நான் சொல்லப்போகும் ஒரே செய்தி, வெற்றி பெறுவோம் நண்பர்களே. நாட்டுக்காக இதைச் செய்வோம்” என்று கூறியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 2 சதங்கள், 3 அரைசதங்களுடன் 479 ரன்களைச் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement