
இந்தூரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் நிர்ணயித்த 173 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா டக் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த விராட் கோலி அதிரடியாக விளையாடி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக செயல்பட்டு 68 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி அவுட்டானார்.
இந்நிலையில் பொதுவாகவே ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடக்கூடிய விராட் கோலியை முதல் பந்திலிருந்தே 180 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்று நினைப்பது இந்தியாவுக்கு ஆபத்தை கொடுக்கும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார். இதற்கான காரணத்தைப் பற்றி தம்முடைய யூடியூப் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கடந்த டி20 உலகக் கோப்பைக்கு முன் அவர் இதை செய்தார் என்று நினைக்கிறேன். அதாவது முதல் பந்திலிருந்தே அவர் அதிரடியாக விளையாட முயற்சித்தார். அப்படி விளையாடுவதற்கு அவரிடம் திறமை இருக்கிறது. அப்படி விளையாட நினைத்தால் கண்டிப்பாக அவரால் எளிதாக அடிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் விராட் கோலி எப்படி விளையாடினால் அணிக்கு பொருந்தும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.