
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அணியின் பயிற்சியாளர்களை மற்றுதல், புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், வீரர்களை ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர். அதன் படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் தங்கள் பணிகளை செய்துவருகிறது.
அந்தவகையில், எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை அணியின் அலோசகராக நியமித்துள்ளது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் லக்னோ அணி நிர்வாகம் நேற்றையம் தினம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தான் அந்த அணி நிர்வாகம் எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக கேல் ராகுலை விடுவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியகின.