Advertisement

ஆட்டநாயகன் விருது குறித்து ரவீந்திர ஜடேஜா ஓபன் டாக்!

நான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு 8 மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்து இருக்கிறேன். நான் இந்த வடிவ கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு ஆரம்பத்திலேயே மாறிக்கொள்ள நினைத்தேன் என ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். 

Advertisement
“Luckily Did Well With The Ball”- Ravindra Jadeja
“Luckily Did Well With The Ball”- Ravindra Jadeja (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 18, 2023 • 12:55 PM

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்து இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 18, 2023 • 12:55 PM

இதை அடுத்து விளையாடிய இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் மோசமான நிலையில் இருந்த இந்திய அணியை ரவீந்திர ஜடேஜா கே எல் ராகுலுடன் கூட்டு சேர்ந்து மீட்டு வெற்றி பெற வைத்தார். இந்த ஜோடி 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கேஎல் ராகுல் ஆட்டம் இழக்காமல் 75 ரன்கள், ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 45 ரன்கள் எடுத்தார்கள். மேலும் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் இரண்டு விக்கட்டுகளையும் ஒரு கேட்ச்சையும் பிடித்திருந்தார்.

Trending

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா பேசுகையில், “நான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு 8 மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்து இருக்கிறேன். நான் இந்த வடிவ கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு ஆரம்பத்திலேயே மாறிக்கொள்ள நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு இரண்டு விக்கட்டுகளும் கிடைத்தது. நான் பேட்டிங்கில் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்க மட்டும்தான் நினைத்தேன். ராகுல் நாங்கள் டெஸ்ட் விளையாடி இங்கு வந்திருக்கிறோம். 

இங்கு லைன் மற்றும் லென்த் வேறானதாக இருக்கும். இங்கு ஒரே மாதிரி பந்தில் வேகத்தை எதிர்பார்க்க முடியாது. நான் நல்ல இடங்களில் பந்து வீச தேடிக் கொண்டிருந்தேன். எனக்கு பந்தில் கொஞ்சம் திருப்பமும் கிடைத்தது. நான் சரியான ஏரியாக்களில் வீசினால் ஆடுகளம் மற்றதை பார்த்துக் கொள்ளும் என்று நான் முடிவு செய்தேன்” என்று தெரிவித்தார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement