விராட் கோலி விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலி விலகியதற்கான விஷயத்தில் தான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாக ஏபிடி வில்லியர்ஸ் புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய வீரர் விராட் கோலி விலகினார். ஆனால் அவர் எந்த காரணத்திற்காக விலகினார் என்பது தெரியாமலேயே இருந்தார். அச்சமயத்தில் தான் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ், விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு 2ஆவது குழந்தை பிறக்கவுள்ளது. இதன் காரணமாகவே விராட் கோலி டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதாக தெரிவித்திருந்தார்.
Trending
ஆனால் விராட் கோலியோ, அனுஷ்கா சர்மாவோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில், விராட் கோலி விஷயத்தில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாக ஏபிடி வில்லியர்ஸ் புதிய கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியா அவர், “விராட் கோலி விஷயத்தில் நான் பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டேன். விராட் கோலி குறித்து கூறிய தகவல் உண்மையில்லை. விராட் கோலியின் விலகலுக்கான காரணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
AB de Villiers has extended a sincere apology For Spreading False Information About Virat Kohli and Anushka Sharma Expecting 2nd Child!#INDvENG #India #ViratKohli #AnushkaSharma #RCB #AbDeVilliers #SouthAfrica pic.twitter.com/ug2YLcYT6z
— CRICKETNMORE (@cricketnmore) February 9, 2024
மேலும் விராட் கோலியின் உடல்நலன் மற்றும் மனநலன் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உலகமே விராட் கோலியின் கிரிக்கெட்டை பின் தொடர்கிறது. அவரின் விலகலுக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. அவர் விலகியதற்கான காரணம் எதுவாக இருப்பினும், நிச்சயம் அவர் சிறந்த கம்பேக்கை கொடுப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now