Advertisement

அஸ்வினை வலைக்குள் பார்த்ததும் அவரது கால்களை தொட்டு வணங்கினேன் - மகேஷ் பித்தியா!

இன்று நான் எனது குருவிடம் ஆசிர்வாதம் பெற்றேன். நான் எப்பொழுதும் அவரைப் போலவே பந்து வீச விரும்புகிறேன் என்று மகேஷ் பித்தியா தெரிவித்துள்ளார்.

Advertisement
 Mahesh Pithiya on his interaction with Ravichandran Ashwin!
Mahesh Pithiya on his interaction with Ravichandran Ashwin! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 07, 2023 • 08:25 PM

உலகக் கிரிக்கெட்டில் மிக முக்கியமான தொடராக பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாக்பூரில் துவங்க இருக்கும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி அமைந்திருக்கிறது. இந்தத் தொடர் இந்திய அணிக்கு நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு மிக மிக முக்கியமான ஒரு தொடர் ஆகும்.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 07, 2023 • 08:25 PM

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி இந்த ஓட்டத்தில் முன்னணியில் இருந்தாலும், தங்கள் நாட்டில் வைத்து பார்டர் கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணியிடம் இருமுறை தோல்வியடைந்து இருப்பதால் அதற்கு பதிலடி தர வேண்டி, மேலும் இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் ஆஸ்திரேலியாவுக்கும் இது மிக முக்கியமான தொடராக அமைந்திருக்கிறது!

Trending

இப்படியான காரணங்களால் இந்தியாவில் பயிற்சி ஆட்டங்களை மறுத்துவிட்டு பெங்களூர் ஆலூர் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தை பெற்று பயிற்சி செய்து வருகிறது. இதில் ஒரு சிறப்பு அம்சமாக இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை போலவே வீசும் பரோடாவை சேர்ந்த 21 வயது சுழற் பந்துவீச்சாளர் மகேஷ் பித்தியாவை வரவழைத்து பயிற்சி செய்து கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா அணி.

இந்நிலையில், மகேஷ் பித்தியா அஸ்வினை சந்தித்தது தொடர்பாக போசுகையில், “இன்று நான் எனது குருவிடம் ஆசிர்வாதம் பெற்றேன். நான் எப்பொழுதும் அவரைப் போலவே பந்து வீச விரும்புகிறேன். நான் அவரை வலைக்குள் பார்த்ததும் அவரது கால்களை தொட்டு வணங்கினேன். அவர் என்னை கட்டி அணைத்து நட்புகாட்டி பின்பு ஆஸ்திரேலியர்கள் எப்படியான பந்துகளை வீச சொன்னார்கள் என்று விசாரித்தார். பின்னர் விராட் கோலியும் என்னை பார்த்து கையை உயர்த்தி சிரித்தபடி குட்லக் என்றார்.

இந்த ஆஸ்திரேலியா அணியுடன் இணைந்து பயிற்சி செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய வலைப்பயிற்சியில் எனக்கு ஸ்மித்துக்கு பந்து வீசுவது மட்டுமே வேலை. அவர் என்னிடம் குறிப்பிட்ட எந்த பந்தையும் வீச சொல்லி பயிற்சி செய்யவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement