
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராக அறியப்படுபவர் மனோஜ் திவரி. இவர் 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம், ஒரு அரைசதம் என 302 ரன்களை எடுத்துள்ளார். அதன்பின் அரசியலில் நுழைந்ததுடன், மம்தா பானர்ஜின் அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராகவும் ஆனார்.
அரசியலில் இருந்தபோதிலும் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடி வந்தார். 2022-2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டிகளில் மேற்கு வங்கத்துக்காக விளையாடி அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அதேபோல் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ்(டெல்லி கேப்பிட்டல்ஸ்) மற்றும் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மனோஜ் திவாரி இடம் பெற்று கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவையான ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் இதுவரை 98 போட்டிகளில் விளையாடியுள்ள மனோஜ் திவாரி 7 அரைசதங்களுடன், 1,695 ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் தான் தொடர்ச்சியான காயங்களை சந்தித்த அவர், இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.