Advertisement

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸி அணியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்?

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேஎலிய அணியின் ரிசர்வ் வீர்ர்கள் பட்டியலில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸி அணியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்?
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸி அணியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 20, 2024 • 02:46 PM

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் அத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த கோப்பையை வென்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 20, 2024 • 02:46 PM

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.அதன்படி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், கேமரூன் க்ரீன், டிம் டேவிட், ஆடம் ஸாம்பா போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

Trending

இவர்களைத் தவிர்த்து ஜோஷ் இங்கிலிஸ், ஆஷ்டன் அகர், நாதன் எல்லிஸ் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி வரும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இடம்பிடிக்காதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்திருந்தது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பயணிக்கு ஆஸ்திரேலிய அணியின் ரிஸர்வ் வீரர்களுக்கான போட்டியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதேசமயம் கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட வீரர்கள் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் விளையாடவுள்ள காரணத்தால் அவர்கள் அமெரிக்கா செல்வது தாமதமாகியுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மே 30ஆம் தேதி பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளதால், அதில் இந்த வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement