விராட் கோலியை தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் - மேத்யூ ஹைடன்!
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கி விளையாடவில்லை என்றால் அவரை அணியிலேயே சேர்க்க கூடாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களது முதல் போட்டியில் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜூன் 05ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் மோதியுள்ள போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், அயர்லாந்து அணியும் சமீப காலங்களில் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருவதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. இந்நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி தொடக்க வீரராக விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய மேத்யூ ஹைடன், “விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கி விளையாடவில்லை என்றால் அவரை அணியிலேயே சேர்க்க கூடாது. எப்போதுமே பிளேயிங் 11இல் வலது மற்றும் இடது கை பேட்டர்கள் இருக்கும் வகையில் பேட்டிங் வரிசையை அமைக்க வேண்டும். ஆனால், இந்திய அணியில் டாப் 5 வரிசையில் மொத்தமாகவே வலது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் வகையில் அணியை தேர்வு செய்தால், அது எதிரணிக்கு சாதமாக இருக்கும்.
அதன் காரணமாக ரோஹித் சர்மாவிற்கு பதிலாக நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலியை யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் தொடக்க வீரராக களமிறக்கி விளையாட வைக்க வேண்டும் . வேண்டுமானால் ரோஹித் சர்மாவை மிடில் ஆர்டரில் விளையாட வைக்கலாம். டி20 கிரிக்கெட்டில் 4ஆவது வீரராக களமிறங்கி விளையாடிய போது தான் ரோஹித் சர்மா அதிக ரன்களை குவித்திருக்கிறார். ஆதலால், அவரை மிடில் ஆர்டரில் களமிறக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now