Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: இறுதிப்போட்டிகான நடுவர்களை அறிவித்தது ஐசிசி!

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான போட்டி நடுவர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023: இறுதிப்போட்டிகான நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
ஐசிசி உலகக்கோப்பை 2023: இறுதிப்போட்டிகான நடுவர்களை அறிவித்தது ஐசிசி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 17, 2023 • 08:56 PM

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நவம்பர் 19ஆம் தேதி அஹ்மதாபாத் நகரில் கோலாகலமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் பட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோதுகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 17, 2023 • 08:56 PM

இந்த போட்டியில் இந்தியாவை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வீழ்த்தியதை போல் சிறப்பாக விளையாடி 6ஆவது உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் எந்த எதிரணிகளுக்கும் அடங்காமல் தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா 2011 போல கோப்பையை வெல்லாமல் ஓயமாட்டோம் என்ற வகையில் மிரட்டி வருகிறது.

Trending

குறிப்பாக ரோஹித் சர்மா முதல் ஷமி வரை தற்சமயத்தில் அனைத்து வீரர்களும் அபாரமாக செயல்பட்டு சிறப்பான ஃபார்மில் இருப்பதால் நிச்சயம் இம்முறை இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் இரு அணிகளுக்கும் சமமான தீர்ப்புகளை வழங்கி வெற்றிகளில் முக்கிய பங்காற்றக்கூடிய நடுவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதன் படி இப்போட்டியின் முதன்மை நடுவராக ஆன்டி பைஃகிராப்ட், 4ஆவது நடுவராக கிறிஸ் கேப்ஃனி, 3ஆவது மற்றும் டிஆர்எஸ் தீர்ப்புகளை வழங்கப்போகும் நடுவராக ஜோயல் வில்சன் ஆகியோர் செயல்படுவார்கள் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. ஆனால் களத்தில் இருந்து பரபரப்பான தருணங்களில் முக்கியமான தீர்ப்புகளை வழங்கப் போகும் கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டல்போரஃப் ஆகியோர் செயல்படுபவர்கள் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement