
Men's T20I Rankings: Shreyas Iyer moves to top 20, KL Rahul drops to tenth (Image Source: Google)
ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை தொடர் முடிந்ததை அடுத்து பட்டியலில் பல மாற்றம் கண்டுள்ளது. தொடர்ந்து 12 போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி தற்போது தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் சில இந்திய வீரர்கள் நல்ல முன்னேற்றத்தை கண்டாலும், டாப் 10 பட்டியலில் கே.எல்.ராகுல் மட்டுமே 10ஆவது இடத்தில் உள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆட்டமிழக்காமல் மொத்தம் 204 ரன்கள் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர், டி20 தரவரிசை பட்டியலில் 27 இடங்கள் முன்னேறி தற்போது 18ஆவது இடத்தில் உள்ளார். கேப்டன் ரோஹித் சர்மா, தொடர்ந்து 2 போட்டியில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து, 3 போட்டியில் வெறும் 50 ரன்கள் தான் அடித்தார். இதனால் அவர் 11ஆவது இடத்தில் இருந்து 13ஆவது இடத்துக்கு சரிந்துள்ளார்.