
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது இன்னும் இரு தினங்களில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்றவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் எதிவரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரின் வெற்றியாளரை முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர். அந்தவகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரும் வெல்லும் அணியை காணித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வெல்லும். அதேசமயம் இத்தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை நான் தேர்வு செய்வேன். ஏனெனில் அவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான் சதமடித்து தனது ஃபார்மை மீட்டுள்ளார். அதனால் இத்தொடரிலும் அவர் சிறப்பாக செயல்படுவதுடன் அதிக ரன்களையும் குவிப்பார் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.