
உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. இந்த தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் இயக்குனரும், முன்னாள் பயிற்சியாளருமான மிக்கி ஆர்த்தர், பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை கூறினார்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. ஒருவேளை பாகிஸ்தான் முழுவதுமாக 50 ஓவர்கள் பேட்டிங் செய்து இருந்தால் நிச்சயம் 300 ரன்களை தாண்டி ரன் குவித்திருக்க முடியும். அதன் பின் தென் ஆப்பிரிக்கா அணி சேஸிங் செய்த போது அந்த அணியை 235 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்து விக்கெட்களை வரிசையாக வீழ்த்தி கடைசி 1 விக்கெட்டுடன் வெற்றிக்கு போராட வைத்தது பாகிஸ்தான் அணி.
ஆனால், பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற முடியவில்லை. தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி குறித்து பேசிய மிக்கி ஆர்த்தர், "மிக நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை ஆடவில்லை. நங்கள் ஒரு அணியாக நன்றாக பேட்டிங் ஆடவில்லை. இந்த பிட்ச்சில் 300 ரன்கள் அடித்து இருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால், நங்கள் போதிய ரன்களை அடிக்கவில்லை.