
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்டர்களில் ஒருவராக திகழந்தவர் ஃபகர் ஸமான். பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகமான இவர், இதுவரை 82 ஒருநாள் போட்டிகளிலும், 92 டி20 போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இதில் மொத்தமாக 11 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியுள்ள இவர், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஃபகர் ஸமான் நீக்கப்பட்டடார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உடற்தகுதி தேர்வில் ஃபகர் ஸமான் தோலியடைந்ததன் காரணமாகவே அவர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியின் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுடன், அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வானும், துணைக்கேப்டனாக சல்மான் அலி ஆகாவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தது.