
வங்கதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடர் முடிவில் வங்கதேச அணியானது இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியதுடன், தொடரை முழுமையாக கைப்பற்றியும் சாதனைகளை குவித்துள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏனேனில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் ஒரு அவமானகரமான தோல்வியை 2-0 என்ற கணக்கில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் காரணமாக அந்த அணியின் கேப்டன், தேர்வுகு குழு, நட்சத்திர வீரர்கள் என அனைவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இத்தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது சில மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில். ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும், இதன் காரணமாக மூன்று வடிவிலான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் நியமிக்கப்படவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷன் மசூத்தின் செயல்பாடுகள் அவ்வளவாக எடுபடவில்லை.