ராகுல் டிராவிட்டின் வாழ்நாள் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 123 ரன்களையும், ஒல்லி போப் 66 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ'ரூக்கே 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் அந்த அணி ரன்களைச் சேர்க்க தவறியதால் முதல் இன்னிங்ஸில் 125 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Trending
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 36ஆவது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் சர்சவதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியளில் ராகுல் டிராவிட்டை சமன்செய்துள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் 164 போட்டிகளில் விளையாடி 36 சதங்களை அடித்ததுடன், அதிக டெஸ்ட் சதமடித்த வீரர்கள் பட்டியலில் 5ஆம் இடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் இங்கிலாந்தின் ஜோ ரூட் 151 போட்டிகளில் 36 சதங்களை விளாசி அவரது சாதனையை சமன்செய்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரர்கள்
- சச்சின் டெண்டுல்கர் - 51 சதங்கள்
- ஜாக்ஸ் காலிஸ் - 45 சதங்கள்
- ரிக்கி பாண்டிக் - 41 சதங்கள்
- குமார் சங்கக்காரா- 38 சதங்கள்
- ஜோ ரூட் - 36 சதங்கள்
Win Big, Make Your Cricket Tales Now