
2024 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சிறப்பான ஒரு ஆண்டாக இருந்துள்ளது. அந்தவகையில் கடந்துள்ள 2024ஆம் ஆண்டில் பல சிறந்த பந்துவீச்சும் பதிவாகியுள்ளது. இதில் இந்திய அணி ஆண்டின் இறுதியில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், பந்துவீச்சு துறையானது உலகின் வலிமை வாய்ந்த ஒன்றாக இருந்துள்ளது. இந்நிலையில் 2024ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் 5 பந்துவீச்சாளர்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
ஜஸ்பிரித் பும்ரா
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆம் ஆண்டின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் பந்துவீச்சாளராக உள்ளார். அவர் இந்த ஆண்டு 13 டெஸ்ட் போட்டிகளில் 26 இன்னிங்ஸ்களில் விளையாடி 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 45 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றியது அவரது சிறந்த செயல்திறனாக உள்ளது. அதிலும் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் 30 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.