
SL vs BAN, 1st Test: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் சதமடித்து அசத்தியதுடன் சிறப்பு சாதனை ஒன்றையும் படைத்துள்ளனர்.
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிகூர் ரஹிம் அகியோரின் அபாரமான சதங்கள் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 292 ரன்களைச் சேர்த்துள்ள்து.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய முஷ்ஃபிக்கூர் ரஹிம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 106 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இலங்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வங்கதேச பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார். முன்னதாக முகமது அஷ்ரஃபுல் 18 இன்னிங்ஸ்களில் 751 ரகளை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 800+ ரன்களைச் சேர்த்து முதலிடம் பிடித்துள்ளர்.