
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் சுனில் நரைன் இந்த ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் டி20 சதத்தையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு எதிரணி பேட்டர்களை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்துள்ளார்.
இதன் காரணமாக வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் சுனில் நரைன் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் பேட்டிங், பவுலிங்கில் அசத்திவரும் சுனில் நரைன் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்தால் அது கூடுதல் பலமாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பாவெலும், சுனில் நரைனிடம் பேசியுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடப் போவதில்லை என சுனில் நரைன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என அழைப்புகள் வந்தன. நான் ஓய்வில் இருந்து திரும்ப வந்து டி20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என சிலர் சொல்கிறார்கள்.