Advertisement

ஆஸ்திரேலிய அணிக்கு அட்வைஸ் வழங்கிய இயன் சேப்பல்!

அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

Advertisement
Nathan Lyon is not R Ashwin’: Ian Chappell!
Nathan Lyon is not R Ashwin’: Ian Chappell! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 22, 2023 • 08:03 PM

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. நடப்பு பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவும் அமைந்துள்ளனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 22, 2023 • 08:03 PM

இருவரும் இதுவரையில் 31 விக்கெட்டுகளை இந்தத் தொடரில் வீழ்த்தி உள்ளனர். ஜடேஜா 17 விக்கெட்டுகளும், அஸ்வின் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில், அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

Trending

இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவில் விளையாடும்போது எதிரணியினர் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல பந்துவீச முயற்சிப்பார்கள். அவர்கள் இருவருக்கும் இந்தியாவில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது நன்கு தெரியும். அஸ்வின் ஒரு ஸ்மார்ட்டான பவுலர். அவர் ஆஸ்திரேலியாவிலும் அபாரமாக பந்து வீசி இருந்தார். அவர் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். ஜடேஜா தனது பவுலிங் திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளார்.

டெல்லி டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அபாரமாக பந்து வீசி இருந்தார். ஆனாலும், ஜடேஜா அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். சில நேரங்களில் அப்படி நடக்கும். களத்தில் அவர்கள் செய்வதை உங்களால் (ஆஸி. வீரர்கள்) செய்ய முடியாது. அஸ்வினை போல முயற்சிக்காமல் நாதன் லயன் தன்னை போலவே பந்துவீச வேண்டும்” என சேப்பல் தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement