பாகிஸ்தன் டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் யார்?
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியின் கேப்டன் யார் என்பது குறிப்பிடப்படவில்லை.
பாகிஸ்தான் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 04ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதில் இங்கிலாந்து தொடரின் போது ஓய்வில் இருந்த பாட் கம்மின்ஸ் மீண்டும் அணியில் இணைந்துள்ளதுடன், கேப்டனாகவும் செயல்படவுள்ளார். அவருடன் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Trending
இந்நிலையில், இத்தொடருக்கான பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்றைய தினம் அறிவித்தது. மேலும் இத்தொடருக்கான பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வானும், அணியின் துணைக் கேப்டனாக சல்மான் அலி அகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா உள்ளிட்டோரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் பகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள பாட் காம்மின்ஸ், டி20 அணி கேப்டன் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் ஹேசில்வுட் என நட்சத்திர வீரர்களுக்கு இந்த டி20 அணியில் இருந்து ஓய்வளிக்கப்படவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதேசமயம் கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஜோஷ் இங்கிலிஸ், ஆகியோருடன், கூப்பர் கன்னொலி, ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஆரோன் ஹார்டி, மேத்யூ ஷார்ட் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இருப்பினும் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் யார் என்பது குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஏனெனில் அணியின் டி20 கேப்டனான மிட்செல் மார்ஷுக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதனால் இத்தொடருக்கான அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த அணியில் அனுபவ வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் இருப்பதால் அவர்களில் ஒருவருக்கு கேப்டன் பதவில் வழங்கப்படும் என எதிர்பர்க்கப்படுகிறது. இதுல் கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் மற்றும் பிக் பேஷ் லீக் தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட அனுபவத்தை பெற்றுள்ளார் என்பதால் அவர் தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய டி20 அணி: சீன் அபோட், ஸேவியர் பார்ட்லெட், கூப்பர் கானொலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.
Win Big, Make Your Cricket Tales Now