
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது எதிவரும் ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இத்தொடருக்கான இந்திய அணி இன்றைய தினம் இங்கிலாந்து செல்லவுள்ளது.
இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக மும்பையில் உள்ள பிசிசிஐ-யில் தலைமை அலுவலகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவரும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில், ரோஹித்-கோலி இடத்தை நிரப்புவது கடினம் என்று தெரிவித்துள்ளார்.