
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆலோசகராகவும் செய்ல்பட்டுள்ளார். இந்நிலையில் இவர், தற்போதை வீரர்களைக் கொண்டு உருவாக்கிய உலக டெஸ்ட் லெவனை அறிவித்துள்ளார். இவர் உருவாக்கியுள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவையும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரையும் தேர்வு செய்துள்ளார்.
அதன்பின் அணியின் மூன்றாம் இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்னையும், நான்காவது இடத்திற்கு விராட் கோலியையும் தேர்வு செய்துள்ள அவர், இந்த அணியின் விக்கெட் கீப்பராக இந்தியாவின் ரிஷப் பந்தை நியமித்துள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸிற்கு சஞ்சய் பங்கர் வாய்ப்பினை வழங்கியுள்ளார்.
அவரைத் தவிர்த்து இந்திய ஆல் அரவுண்டர்களான ரவீந்திரா ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் அகியோருக்கு இடம் கொடுத்திருக்கும் அவர், அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருடன், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டிற்கும் இந்த உலக டெஸ்ட் லெவன் அணியில் சஞ்சய் பங்கர் இடமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.