
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜஸ்பிரித் பும்ரா அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவாரா இல்லையா என்பது அணியின் தேவைகள் மற்றும் சூழ்நிலையைப் பார்த்து முடிவு செய்யப்படும் என்றும், கருண் நாயருக்கு நீண்ட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
எதிவரும் ஜூன் 20 ஆம் தேதி இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது தலைமை பயிற்சியாளரிடம் பும்ரா மற்றும் கருண் நாயர் ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கௌம்பீர், “இந்த டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா 4 போட்டிகளில் மட்டும் விளையாடுவார். ஆனால் இதுகுறித்து இன்னும் நாங்கள் எதனையும் முடிவு செய்யவில்லை. ஏனெனில் பும்ரா போன்ற ஒரு வீரரை மாற்றுவது கடினம், ஆனால் எங்களிடம் தரமான விருப்பங்கள் உள்ளன" என்று கம்பீர் கூறினார்.