
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தாற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் தொடங்கிய இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டியானது டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது.
இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணியானது இந்திய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் காரணமாக 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்று கணக்கில் தற்போது தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை வகுத்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளது.
அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று 1-1 என்ற கணக்கில் சமன் செய்ய முடியும். ஒருவேளை அந்த போட்டியில் தோல்வியடைந்தாலோ அல்லது டிரா ஆனாலோ இந்திய அணி மீண்டும் ஒருமுறை தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும்.