
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி 37 ஓவர்களில் முடிந்தது, இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 117 ரன்களில் ஆட்டம் இழக்க அதனை ஆஸ்திரேலிய அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 11வது ஓவரிலே எட்டி அசத்தினர்.இதன் மூலம் அதிக பந்துகள் மிச்சம் இருந்த நிலையில் இந்திய அணி தோல்வியை தழுவியது இதுவே முதல் முறையாகும்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், “ இந்த போட்டி மிகவும் சீக்கிரமாக முடிவடைந்து விட்டது. வெறும் 37 ஓவர் தான் போட்டி நடைபெற்றது. இதுபோன்ற சம்பவங்களை நாம் அதிக முறையில் பார்க்க முடியாது. இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் எப்படி செயல்படும் என்று எங்களால் கணிக்க முடியவில்லை.
அதனால் எந்த இலக்கை துரத்த போகிறோம் என்று கொஞ்சம் கூட நாங்கள் யோசிக்கவில்லை. போட்டிக்கு சென்று எங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதில் நாங்கள் குறியாக இருந்தோம். இந்திய அணி வீரர்களை நாங்கள் நெருக்கடிக்கு ஆளாக்க விரும்பினோம். அதிர்ஷ்டவசமாக எங்களால் அதனை செய்ய முடிந்தது. இது போன்ற நாள் எல்லா அணிகளுக்கும் நடக்கும். நல்ல வேலையாக நாங்கள் வெற்றி பெறும் அணியாக இருந்தோம்.