
பாகிஸ்தான் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதனையடுத்து நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்னூயில் நேற்று முந்தினம் நடைபெற்றது. மழை காரணமாக தமதமாக தொடங்கிய இப்போட்டியானது 42 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ரைஸ் மாரியூ அரைசதம் கடந்து அசத்தினார். இதில் அவர் 58 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெலும் அரைசதம் கடந்ததுடன் 59 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைச் சேர்த்தது.