
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றுள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அந்த அணியை சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதி செஞ்சூரியனில் தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட்டாக நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இருநாட்டு அணிகளையும் அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளது.
மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி டெம்பா பாவுமா தலைமையிலான இந்த டெஸ்ட் அணியில் அறிமுக வீரரான கார்பின் போஷ் தென் அப்பிரிக்க பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.