Advertisement

மரணப் படுக்கையிலும் இந்நிகழ்வை நான் நினைத்துப் பார்ப்பேன் - பாட் கம்மின்ஸ்!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது சமிபத்திய பேட்டி ஒன்றில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்றை தான் சாகும் போதும் நினைத்துப் பார்ப்பேன் என கூறியுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 27, 2023 • 23:32 PM
மரணப் படுக்கையிலும் இந்நிகழ்வை நான் நினைத்துப் பார்ப்பேன் - பாட் கம்மின்ஸ்!
மரணப் படுக்கையிலும் இந்நிகழ்வை நான் நினைத்துப் பார்ப்பேன் - பாட் கம்மின்ஸ்! (Image Source: Google)
Advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இறுதிப் போட்டியை காண சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய ரசிகர்கள் நேரில் வருவார்கள். ஆஸ்திரேலிய அணி அவர்களை நிசப்தம் ஆக்கிக் காட்டும். ஒரு லட்சம் மக்கள் நிசப்தமாக ஆக்குவதே எங்களின் இலக்கு என கூறி இருந்தார்.

அவர் சொன்னதைப் போல இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த போது விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. ஒரு கட்டத்தில் ராகுலுடன் கூட்டணி அமைத்து அரைசதம் அடித்திருந்த விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது மைதானம் நிசப்தம் ஆனது. பாட் கம்மின்ஸ் சொன்னதைப் போல ஒரு லட்சம் ரசிகர்களை மயான அமைதியுடன் இருக்கச் செய்தார். 

Trending


இந்நிலையில் தனது சமிபத்திய பேட்டி ஒன்றில் அதிலும் உலகக்கோப்பை வென்ற தருணத்தை விட அந்த ரசிகர்களை நிசப்தம் ஆக்கியதே பெரிய தருணம். சாகும் தருவாயில் கூட விராட் கோலி விக்கெட்டுக்கு பின் ஒரு லட்சம் ரசிகர்கள் நிசப்தமாக இருந்த தருணத்தை நினைத்துப் பார்ப்பேன் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார். 

அந்த பேட்டியில் 70 வயதில் உங்கள் மரணப் படுக்கையில் 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி வெற்றி குறித்து ஒரு தருணத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றால் எதை நினைத்துப் பார்ப்பீர்கள்? என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.

 

அதற்கு பதில் அளித்த பாட் கம்மின்ஸ் , “விராட் கோலியின் விக்கெட். அப்போது நான் உற்சாகத்தில் இருந்தேன். நாங்கள் விக்கெட் வீழ்த்திய பின் ஒன்று கூடினோம். அப்போது ஸ்டீவ் ஸ்மித், "ஒரு வினாடி ரசிகர்களை கவனியுங்கள்" என்றார். நாங்கள் ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்து ரசிகர்களை கவனித்தோம். ஒரு நூலகத்தில் எப்படி அமைதியாக இருக்குமோ அப்படி இருந்தது அந்த மைதானம். 1 லட்சம் இந்தியர்கள் அங்கே இருந்தார்கள். ஆனால், அமைதியாக இருந்தது. அந்த தருணத்தை நீண்ட காலம் நான் நினைத்துக் கொண்டே இருப்பேன்" என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement