ஆட்டநாயகன் விருதை பந்து வீச்சாளர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் - ரஜத் பட்டிதர்!
ஏனெனில் இந்த மைதானத்தில் ஒரு பேட்டிங் பிரிவை நிறுத்துவது எளிதல்ல, எனவே அதற்கான பெருமை பந்துவீச்சாளர்களையே சாரும் என்று ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நெற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி 67 ரன்களையும், கேப்டன் ரஜத் பட்டிதார் 64 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்மா 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களைச் சேர்த்தது. மும்பை தரப்பில் ஹர்திக் பாண்டியா, டிரென்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Trending
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். அந்த அணியின் திலக் வர்மா 56 ரன்களையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 42 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ரஜத் படிதார், “இது உண்மையிலேயே ஒரு அற்புதமான போட்டி. பந்து வீச்சாளர்கள் துணிச்சலைக் காட்டிய விதம் அற்புதமாக இருந்தது. உண்மையைச் சொல்லப் போனால், எனக்கு கிடைத்த இந்த ஆட்டநாயகன் விருது பந்து வீச்சாளர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஏனெனில் இந்த மைதானத்தில் ஒரு பேட்டிங் பிரிவை நிறுத்துவது எளிதல்ல, எனவே அதற்கான பெருமை அவர்களுக்கே செல்கிறது.
Also Read: Funding To Save Test Cricket
வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. இறுதியில் குர்ணால் பந்து வீசிய விதம் அற்புதமாக இருந்தது. கடைசி ஓவரில், அது எளிதாக இல்லை, அவர் பந்து வீசிய விதமும் அவர் காட்டிய தைரியமும் அற்புதமானது என்று நான் நினைக்கிறேன். அதேசமயம் இன்றைய ஆட்டத்தில் சுயாஷ் சர்மா பந்துவீசிய வீதமும் அபாரமாக இருந்தது” என்ரு தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now