
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அடைந்த படுதோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இதனால் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் கேரி கிறிஸ்டன் தேர்வுசெய்யப்பட்டார். அதேசமயம், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பியும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி குரூப் சுற்றுடன் வெளியேறியது. அதன் பின் பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சமீபத்திய முடிவுகளில் விரும்பமின்பை காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கேரி கிறிஸ்டன் விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தற்காலிக பயிற்சியாளராகவும் ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டிருந்தர். அவரது பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், அடுத்து நடந்த டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி மீது மீண்டும் விமர்சனங்கள் எழத்தொடங்கின.