AUS vs PAK: முதல் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 04ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அந்த அணியில் இங்கிலாந்து தொடரின் போது ஓய்வில் இருந்த பாட் கம்மின்ஸ் மீண்டும் அணியில் இணைந்துள்ளதுடன், கேப்டனாகவும் செயல்படவுள்ளார். அவருடன் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Trending
மேலும் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. அதன்படி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், ஷாஹின் அஃப்ரிடி, நசீம் ஷா அகியோர் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளனர். பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வானையும், துணைக்கேப்டனாக சல்மான் அலி அகாவும் நியமிக்கப்ப்ட்டுள்ளனர்.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்றைய தினமே அறிவித்துள்ளது.
The men’s national selection committee has confirmed Pakistan’s playing XI for the first ODI against Australia.#AUSvPAK pic.twitter.com/kxiX9E2OGc
— Pakistan Cricket (@TheRealPCB) November 3, 2024
அதன்படி முகமது ரிஸ்வான் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர் காம்ரன் குலாமிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் ஆசாம், ஷாஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராவுஃப் உள்ளிடோருடன் முகமது இர்ஃபான் கான், முகமது ஹொஸ்னைன் ஆகியோரும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர். ரிஸ்வான் தலைமையேற்கும் முதல் போட்டி இது என்பதால் அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: அப்துல்லா ஷஃபீக், சைம் அயூப், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் (கேப்டன்), காம்ரன் குலம், சல்மான் அலி ஆஹா, முகமது இர்பான் கான், ஷாகின் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராவுஃப், முகமது ஹஸ்னைன்.
Win Big, Make Your Cricket Tales Now